நவராத்திரி
அகில உலகத்தின் அனைத்துமாக அம்பிகையே விளங்குகிறாள் என்பதை உணர்த்தும் வகையிலும், முப்பெருந்தேவியரையும் ஒன்று சேரப் போற்றும் ஒப்பற்ற விழாவாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. 'நவம்' என்ற சொல்லுக்கு ஒன்பது என்று அர்த்தம். பெரும்பாலான கோவில்களில் இந்த ஒன்பது நவகிரகங்கள் அருள்பாளிக்கும். இந்ஜோதிட நூலின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். இவையும் இந்த நன்நாளில் சிறப்பு பெருகின்றன.
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கி ஒன்பது நாட்கள் வரையில் நவராத்திரியாக அனைவரும் கொண்டாடுகிறார்கள். பத்தாவது நாள் விஜயதசமி நாளையும் இணைத்து மொத்தம் பத்து நாட்கள் நவராத்திரி விழா முடியும்.
இவ்விழாவானது ஆலயங்களில் சமய வைபவமாக மட்டுமல்லாமல் இல்லங்கள், பொது மன்றங்கள், பாடசாலைகள், அலுவலகங்கள், வேலைத்தளங்கள் என எல்லா இடங்களிலும் சரஸ்வதி பூஜை என்றும் கலைவிழா என்றும் காலங்காலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இவ்வாறு பலவிதத்திலும் சிறப்பு பெற்ற நவராத்திரி விரத ஆரம்பம் எப்போது என்பதில் இரு பஞ்சாங்கங்களிடையே குழப்பம் நிலவுவதால் மக்களுக்கு ஆதாரபூர்வமாக சரியான தினத்தை தெரிவிக்க வேண்டிய கடப்பாடு உண்டு.
அதாவது திருக்கணித பஞ்சாங்கப் பிரகாரம் 21-.09-.2017 வியாழக்கிழமை எனவும் வாக்கிய பஞ்சாங்கப்படி 20.-09-.2017 புதன்கிழமை எனவும் குறிக்கப்பட்டுள்ளன.




Like
ReplyDelete