சமய விழுமியங்கள். (இந்து சமயம்)

சமயங்கள் மக்கள் நல்வாழ்வூக்கான பல்வேறு அறகருத்துக்களை கூறியூள்ளது. ஒவ்வொரு சமயத்தினுடைய புனித நூல்களும் பல்வேறு அறகருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன. எந்த மதங்களும் மக்கள் மனங்களை வெல்ல வேண்டுமே தவிர நிலங்களை அல்ல.

மதங்களின் நோக்கம் மக்களின் மனங்களை அன்பால் ஈர்ப்பதே தவிர அறிவால் தூர்ப்பதே அல்ல. மதம் என்பது மக்கள் இதயத்திற்கு இதயம் அன்பு பயணம் போவதற்கு அமைந்த பாலங்கள் மக்களுக்காக மதங்கள் தோன்றினவே அல்லாமல் மதங்களுக்காக மக்கள் தோன்றவில்லை. இந்த பேருண்மையை எல்லா மதங்களும் உணர வேண்டிய காலம் வந்துவிட்டது. உண்மையான கடவூள் பற்றாளன் உண்மையான மதத்தினை நேசிப்பவன் ஆவான். அவன் தன்னால் பார்க்க முடியாத கடவூளை எல்லா உயிர்களிடத்திலும் பார்க்கின்றான். அவனுடைய கடவூள் பக்தி எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக மலர்கிறது. அவன் யாரிடமும் பகைமை கொள்வதே இல்லை. இவ்வாறு சமூக நல்லுறவையூம் விழுமிய பண்பாட்டையூம் மக்களிடையே வளர்த்தெடுப்பதற்கு பிரதானமாக சமயங்கள் துணை நிற்கின்றன.

பொதுவாக சமயங்கள் என்பன மனிதனை நல்வழிப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்குமான ஒரு ஊடகமாக செயற்படுகின்றது. அதாவது மனிதனை நல்ல விடயங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களையூம் சூழல்நிலமைகளையூம் ஏற்படுத்தியூள்ளன. சமய நம்பிக்கை என்பது இந்த உலகத்தை சகோதரத்துவம்இ சமாதானம் என்னும் வழிகளில் இட்டு செல்கின்றது. அத்தோடு சமயம் என்பதிலிருந்து மனிதமனமானது மனித விழுமியங்களையூம் கலாசார பண்பாட்டு அம்சங்களையூம் மனித சமூகம் கற்றுக்கொள்கின்றது. அதே போல மனித சமூகத்தை ஒரு ஒழுக்கமுறை சார்ந்து விளங்கி கொள்ளவூம் மனித மான்பு நிறைந்த பண்புகளாவன சுயநம்பிக்கைஇ தீய சீர்திருத்தம் சுயமாக உணர்ந்து நடந்துக்கொள்ளும் தன்மைஇ சுய ஒழுக்கம்இ சுயமான விருத்தி போன்ற பண்புகளையூம் சமயம் மனிதனுக்கு கற்றுக்கொடுக்கின்றது.

உலகிலே எல்லோராலும் எல்லாக் காரியங்களையூம் இயற்ற முடியாது. பொதுவாக நல்ல செயல்களைச் செய்ய எல்லோராலும் முடியாது. அருஞ் செயல்களை ஆற்றுவோர் ஒரு சிலர்தான் காணப்படுகின்றார்கள். உயர்ந்த உள்ளமும்இ நுட்ப அறிவூம்இ சிறந்த ஆற்றலும் உள்ளவர்கள் தான் பெறுமதியான நல்ல செயற்பாடுகளை மேற்கொள்வார்கள். அதாவது இங்கு மக்களிடையே பண்பாட்டையூம்இ நெறிமுறையான விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைகின்றது. இன்று உலக பொதுமறையான திருக்குறலானது அனைத்து மதங்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. குறிப்பாக பாகுப்பாடற்ற முறையில் எந்த மதக்கருத்தையோ விமர்சிப்பதாக அமையவில்லை. ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் தேவையான சகல நெறிமுறைகளையூம்இ வழிகாட்டல் விடயங்களையூம் எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.

“நன்மை செய்வதற்கு முடியாதவர்களாயினும் தீமை செய்வதை நிறுத்திவிடுங்கள்இ இதுதான் எல்லாரும் மகிழ்ச்சியடைத் தகுந்த இனிய குணம். அவ்வாறின்றி உங்களை நல்ல நெறியிலே செலுத்தும் வழியூம் அதுதான். எனவே இவ்வாறு “நன்றி” என்ற விடயமானது சகல சமயங்களிலும் அதிகளவூ முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக காணப்படுகின்றது. அதிலும் இந்துக்களின் மத்தியில் அதிகளவூ பயன்பாட்டில் உள்ளது. 

இந்து சமயம் 



விழுமியம் தொடர்பான பலவிதமான கருத்துக்களையூம் சிந்தனைகளையூம் எடுத்துக்கூறுவதாக இந்து சமயம் விளங்குகின்றது. அந்த வகையில் இந்து மதமானது பல்வேறு கடவூள்களையூம் புனித நூல்களையூம் ஏற்றுக்கொள்கின்றன. இந்த புனித நுல்கள் சிலவற்றில் மக்களை ஒற்றுமையாக வாழச்செய்வதற்கான வழிமுறைகள் பல குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் வேதங்கள் முதன்மையானவையாக உள்ளது. எல்லா மக்களும் ஒற்றுமையூடனும் இன்பமாகவூம் வாழ வேண்டும் எனும் சிந்தனை வேதங்களில் முக்கியமானதொரு அம்சமாகும். பொதுவாக இந்துக்களின் புனித நூலான “பகவத்கீதையில்” பல்வேறு விதமான ஒழுக்க விழுமியக் கருத்துக்களும் அறம் தொடர்பான சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
 இந்து சமய வேதங்கள் கூறும் சமூக நோக்கங்களை ஆராயூம் போது உண்மையான சமயத்தின் நோக்கம் மனிதன் தனது அகவயமான நட்பண்புகளை வளர்த்துக்கொண்டு தன்னை ஒரு உண்மையான மனிதனாக மாற தூண்டுவதாக அறக்கருத்துக்கள் அமைகின்றன. மேலும் வேதங்கள் முதல் இக்காலத்தில் தோன்றிய நூல்கள் வரை எல்லாம் சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், ஒழுக்கம் சார்ந்த விடயங்களையே அதிகமாக கூறியூள்ளன.
உதாரணமாக “ஒரு மனிதனுக்கு செய்யூம் சேவையானது இறைவனுக்கு செய்யூம் சேவையென கைள்ளீய உபநிடதம்” கூறுகின்றது. மேலும் “ஏகம் சத்பிப்ரா வகுதா வதந்தி” இவ்வாறு அழைப்பதனால் வேதங்கள் ஆரம்பகாலத்தில் பரம்பொருள் ஒன்றே என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்த வகையில் இந்து மதமானது ஒரு இறைக்கொள்கை என்ற நிலையினை கொண்டுள்ளது. அதாவது பரம்பொருள் ஒன்று என்றும் அதன் வடிவங்களாக ஏனைய செயற்பாடுகள் என்பன அமையப்பெற்றுள்ளன. மேலும் “கீதையில்” கிருஸ்ணபகவான் மனிதர்கள் என்னை பலவாறாக எந்த ரூபத்தில் வணங்கினாலும் அவர்களுடைய பக்தியை மேலோங்க செய்கின்றேன் என்று அருளியூள்ளது. மனிதர்கள் மத்தியில் சமத்துவத்தை தெளிவூப்படுத்தும் ஒரு கூற்றாக அமைந்துள்ளது. எனவே இதனடிப்படையில் பார்க்கின்ற போது இந்து சமயத்தில் தோற்றம் பெற்ற நூல்கள்இ வேதங்கள் என்பன மக்களிடையே பரஸ்பரம் தன்மையை ஏற்படுத்தல் மற்றும் சமூக ரீதியில் புரிந்துணர்வையூம் ஒழுக்க ரீதியான பண்பாட்டு அம்சங்களையூம் எடுத்துக்காட்டுகின்றது.

இந்து சமயத்தில் வேதங்களை பொருத்தமட்டடில் மனிதர்களிடையே மட்டுமன்றி பிற உயிர்னங்களிடத்திலும் ஒற்றுமை நிலவ வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது. இதனை யசூர் வேதமானது “ எல்லா உயிர்களையூம் நாம் தோழமை நோக்குடன் பார்போனாக நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் தோழமை நோக்குடன் நோக்குவோமாக என எடுத்தியம்பப்பட்டுள்ளது. (யசூர் வேதம் 36:18)

உபநிடதம்இ மகாவாக்கியங்கள் “நானும் அது நீயூம் அது எல்லா ஒன்று என்னும் அனைவரையூம் சம நோக்குடன் நோக்கும் உயர் நிலை அறத்தை போதிக்கின்றது. அதாவது அனைவரிலும் தெய்வீகம் உண்டு அனைவரையூம் நேசிஇ அனைவரிடமும் அன்பாய் இரு என்னும் உயர்ந்த மனித நேயத்தை போதிக்கின்றது. குறிப்பாக இந்து சமயத்தில் “அன்பே சிவம்” என்ற மந்திரமானது உலகிலுள்ள சகல உயிர்களிடத்திலும் அன்பாய் இருத்தலை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் மனித உறவூகளின் வாழ்வியல் தத்துவங்களை விளக்கும் சைவம் மனிதர்டத்தில் வேறுபாடு காட்டாமல் “தேவன் ஒருவனே எனவூம் அவரை வழிப்படுபவர்களின் குலமும் ஒன்று எனும் அம்சமும் எடுத்துக்காட்டப்படுகின்றது.



இதனை “ஒன்றே குலம் ஒருவனே தேவனும் நன்றே நினைமீன் நமனில்லை நாணமே” (திருமந்திரம் : 2104) என குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் இனம்இ மதம்இ சாதி ரீதியாக எந்த ஒரு வேறுபாடும் இருக்க கூடாது என எடுத்துக்காட்டி உலக சகோதரத்துவத்தை திருமூலர் முன்வைத்துள்ளார். இதனை போலவே சித்தாந்த சாஸ்திரங்களின் ஒன்றான சிவஞான சித்தியார் பிற சமயத்தவர் வணங்கும் கடவூளும் சைவர்களுடைய கடவூளும் ஒன்று என குறிப்பிடப்படுகின்றது. இதனை “யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வமாகி ஆங்கே”, மற்றும் மாதொரு பாகனார் தாம் வருவர்” எனும் அடிகள் விளக்கியூள்ளன.

இங்கு முக்கியமாக பார்க்கும் போது இந்து சமயத்தினுடைய விசாலமான பார்வையூம் அறவணைப்பு தன்மையூம் தௌpவாக விளங்குகின்றது. இங்கு சமய காழ்புணர்ச்சிக்கு அப்பாற்பட்ட மனித நேய அம்சங்கள் மக்களுக்கான ஒழுக்க விழுமியக்கருத்துக்களை எடுத்துக்கூறுவதனை அவதானிக்கலாம். 

இந்து சமயத்திலே திருமனம் என்ற விடயமானது அதிகளவூ ஒழுக்கவிழுமியங்களை கொண்டதாக இருக்கின்றது. அதாவது இங்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையானது பின்பற்றப்படுகின்றது. குறிப்பாக இச்சந்தர்ப்பங்களில் சமயங்களை அடிப்படையாக கொண்ட வகையில் இடம்பெற்றாலும் குல, மத, சாதி, வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் என்பன இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்து சமயத்திலே கடவூள் நம்பிக்கை என்பது அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் கடவூள் மீதான பக்தியை செலுத்தலாம். அதாவது எவரும் கட்டுப்படுத்தலன்றி சுயமாக தமது மதத்தினை பின்பற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்ப்படுகின்றன.

“கீதையில்” கிருணபகவான் மனிதர்கள் என்னை எந்த உருவத்தில் வணங்கினாலும் அவர்களுடைய பக்தியை மேலொங்க செய்கின்றேன் என்று அருளியூள்ளது. மனிதர்கள் மத்தியில் சமத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு கூற்றாக அமைந்துள்ளது. ஒரு சமூக நல்லுறவையூம் சமூக ஒழுக்க விழுமியங்களையூம் வேண்டியிருக்கும் சமயங்களில் இந்து சமயம் முக்கிய இடத்தை பெறுகின்றது. பொதுவாக பார்த்தால் இந்து சமயத்தில் எல்லா சமயத்தின் கருத்துக்களையூம் பிரிவூகளையூம் உள்வாங்கவூம்இ ஆதரிக்கும் பண்புகள் மேலோங்கி காணப்படுகின்றது.
குறிப்பாக இந்து சமயத்தில் காணப்படுகின்ற ஒரு பொருள் கொள்கைஇ பல பொருள் கொள்கை போன்ற கருத்துக்களும் காணப்படுகின்றது. இவ்வாறு பன்மைத்துவத்திற்குள் ஒருமைபாட்டை கட்டியெழுப்பும் ஒரு சமயமாக இந்து சமயம் காணப்படுகின்றது.

“யாவார்க்கும் இறைவற்கு ஒரு பச்சிலை
 யாவார்க்கும் பசுவிற்கு ஒரு வாயூரை
யாவார்க்கும் உண்ணும் போது ஒரு கைபிடி
யாவார்க்கும் பிறர் இன்னுரை தானே…”

எனவே மேற்கூறப்பட்ட திருமந்திர பாடலடியின் மூலம் திருமூலர் ஜீவகாருண்யத்தை பற்றியூம் அத்துடன் சமூக நல்லுறவூம் ஒழுக்க விழுமியங்கள் பற்றியூம் எடுத்துக் கூறுகின்றார். ஏனைய சமயங்களை விட அதிகளவான விழாக்கள் மற்றும் விரதமுறைகள் இந்து சமயத்திலே காணப்படுகின்றது. குறிப்பாக விழாக்களில் தைப்பொங்கள், சித்திரை புத்தாண்டு, ஆடிபதிணெட்டு, தீபாவளி, நவராத்திரி, சிவராத்திரி போன்றனவூம் விரதங்களை பொருத்தமட்டில் சதூர்த்தி, கந்தசஷ்டி, திருவெம்பாவை, அமாவாசை போன்ற மக்கள் மத்தியிலே அதிகளவூ அனுஷ்டிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான நிகழ்வூகள் உறவூகளை வளர்ப்பதிலும், பண்பாட்டு விடயங்களை பரிமாறவூம், மகிழ்ச்சினையூம், ஒற்றுமையினையூம் ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது. அத்துடன் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் ஒவ்வொரு இந்துவூம் கோயில்களுக்கு செல்லுதல் முக்கியமான கடமையாக உள்ளது. மக்களிடையே விழுமியத்தினை எற்படுத்துவதிலும் ஒத்துழைப்பையூம், புரிந்துணர்வூகளையூம் ஏற்படுத்துவதில் இந்து சமயமானது அதிகளவூ பங்களிப்பினையூத் முக்கியத்துவத்தையூம் கொண்டு காணப்படுகின்றது.
       (தொடரும்- கிறிஸ்தவ சமயம்)

Comments

Popular posts from this blog

சிறுவர் உரிமைகள்

தியானம் என்பது