குடித்துக் கும்மாளமடித்து விட்டு
குழந்தகைளை அடித்து உதைக்கும்
குடி வெறி கொண்ட குடிமகனே..!!
சமுதாய பிரமுகரின் பிள்ளையினை
சட்டெனக் கடத்திவிட்டு மிரட்டும்
சட்டத்தை மீறும் கொள்ளையர்களே..!!
மாலை நேர வகுப்புக்குச் செல்லும்
மாணாக்கர்களை வழி மறித்து
மானம் பறிக்கும் காம வெறியர்களே..!!
உடல் உறுப்புக்களை விற்றுப் பிழைக்க
உறவுகளற்ற சிறார்களைக் கடத்தி
உயிர் பறிக்கும் கொள்ளையர்களே..!!
காமவெறி தீர்த்துச் சிற்றின்பம் பெற
கல்லூரிச் சிட்டுக்களின் கற்புக்களை
காவு கொள்ளும் காம சூரர்களே..!!
இத்தனை துன்பங்கள் இருக்கையிலே
இனிப்பு உவந்து இன்று மட்டும்
இனிய விழாவாக்குவதில் பயனுண்டோ..??
மனதில் சபதம் கொண்டு – என்றும்
மழலை சிறார்கள் நிம்தியாய் வாழ
மனமாற வாழ்த்தி வாழவிடுவோம்..!!
சிறுவர்களின் தினமான இந்நாளில்
சிறுமை தனை கழைந்து – என்றும்
சிறுவர்களை வாழ்த்தி வாழவிடுவோம்..!!
இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்கள்..!!
Comments
Post a Comment