சமய விழுமியங்கள் (கிறிஸ்தவ சமயம்)
கிறிஸ்தவர்களின் சமயம் கூறுகின்ற அடிப்படை கொள்கையான “மனிதன் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவன்” ஆவான் என்ற கருத்து யேசு கிறிஸ்து இறைமகனாக மனிதனாக இவ்வூலகில் அவதரிக்கின்றார். இந்த பின்னனியில் மற்றவர்கள் அல்லது மற்ற மனிதர்களை இறைவனின் சாயலாக பார்க்கின்ற கண்ணோட்டம் கிறிஸ்தவ சமயத்தில் வழியூறுத்துவதானது சமூக ஒற்றுமைக்கும் மக்களை நல்வழிப்படுத்தவூம் உதவியாக அமைகின்றது. இங்கு இறைவனின் தன்மை மனிதனிலே வியாபித்திருக்கின்றது. அதாவது சகோதரத்துவம்இ அன்பு, இறக்கம், சகிப்புத்தன்மை என்பன மனித சமூகத்தில் மீது ஏற்படுத்தப்படுகின்றது. இச்சமயத்தில் இறக்கம், இறைவன் மீது அன்பு காட்டுதல், தூய்மைஇ மனித சமூகத்தை நேசித்தல் போன்ற விடயங்களை அடிப்படை அம்சமாக கொள்ளப்படுகின்றது. குறிப்பாக கிறிஸ்தவ சமயத்தில் புனித நூலாக “பைபில”; என்பது காணப்படுகின்றது. ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களுக்கு செல்லுதல் முக்கியமான விடயமாகும்.
கிறித்தவம் ஓரிறைக் கொள்கையூடைய (Monotheism) சமயமாகும். தமிழில் கிறித்தவம், கிறித்துவம், கிறிஸ்தவம் என்றும் குறிப்பர். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையூம் அவரது போதனைகளையூம் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை மெசியா மற்றும் கிறிஸ்து என்னும் அடைமொழிகளாலும் அழைப்பதுண்டு. இவ்விரு சொற்களின் பொருளும் “திருப்பொழிவூ பெற்றவர்” (“அபிஷேகம் செய்யப்பட்டவர்”) என்பதாகும். மெசியா என்னும் சொல் எபிரேய மொழியிலிருந்தும் கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்தும் பிறந்தவை (கிரேக்கம்: Christos; - Messiah என்ற எபிரேயச் சொல்லின் மொழிபெயர்ப்பு). சுமார் 2.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு (உலக மக்கள் தொகையில் 33.3%) உலகின் பெரிய சமயமாகக் கிறிஸ்தவம் காணப்படுகிறது.
கிறிஸ்தவம் பல உட்பிரிவூகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் உட்பிரிவாக இருந்ததாலும், யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர் கிறித்து என கிறித்தவர்கள் நம்புவதாலும் யூத புனித நூலை பழைய ஏற்பாடு என்னும் பெயரில் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூதம் மற்றும் இசுலாம் போலவே கிறிஸ்தவமும் தன்னை ஆபிரகாம் வழி வந்த சமய நம்பிக்கையாகக் கொள்வதால் அது ஆபிரகாமிய சமயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.பத்துக் கட்டளைகள் என்பது நன்னெறி மற்றும் வழிபாடு குறித்த விவிலிய அறிவூரைத் தொகுப்புகளுள் முதன்மையானது; இது யூதம் மற்றும் பெரும்பாலான கிறித்தவ சபைகளின் அறநெறிப் படிப்பினையில் மைய இடம் பெறுகிறது. பத்துக் கட்டளைகள் தொகுப்பு இரு பிரிவாக உள்ளது. முதல் பிரிவில் மூன்று கட்டளைகள்இ இரண்டாம் பிரிவில் ஏழு கட்டளைகள். முதல் மூன்று கட்டளைகளும் இறைவனை அன்பு செய்து வழிபடுகின்ற கடமைகளை எடுத்துக்கூறுகின்றன. எஞ்சிய ஏழு கட்டளைகளும் மனித சமூகத்தின் நலம் பேணுதல் பற்றிய கடமைகளை எடுத்துரைக்கின்றன.
- உண்மையான கடவூளை நம்பி ஏற்றிடுக (போலி தெய்வங்களை ஒதுக்குதல்)
- ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தல் ஆகாது
- ஓய்வூ நாளைத் தூயதாகக் கடைப்பிடி
- உன் தந்தையையூம் தாயையூம் மதித்து நட
- கொலை செய்யாதே
- விபசாரம் செய்யாதே
- களவூ செய்யாதே
- பொய்ச்சான்று சொல்லாதே
- பிறர் மனைவியை விரும்பாதே
- பிறர் உடைமையை விரும்பாதே மேற்கூறிய பத்துக் கட்டளைகளயூம் வரிசைப்படுத்துவதில் கிறித்தவ சபைகளுக்கிடையே சிறு வேறுபாடுகள் உண்டு. நற்செய்திகளின்படி, கிறித்து இச்சட்டங்களை இரண்டு முதன்மைக் கட்டளைகளுக்குள் அடக்குகிறார். அவை:
- மனிதர் கடவூளைத் தம் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்ய வேண்டும்.
- மனிதர் தம்மைத் தாமே அன்புசெய்வதுபோல பிறரையூம் அன்புசெய்ய வேண்டும்.
- நம்பிக்கை அறிக்கையில் அடங்கியூள்ள முதன்மை சமயக் கொள்கைகளாவன:
- தந்தையாம் கடவூள் உலகைப் படைத்தவர் என்பதில் நம்பிக்கை; இயேசு கிறித்து கடவூளின் மகன், உலகத்தைப் பாவத்திலிருந்து மீட்க மனிதராகப் பிறந்தவர்; தூய ஆவி மனிதரைப் புனிதராக்குகின்றார்.
- கிறித்துவின் சாவூ, அவர் பாதாளத்தில் இறங்கியது, உயிர்த்தெழுதல், மற்றும் விண்ணேற்றம் திருச்சபையின் புனிதமும் புனிதர்களுடனான ஒன்றிப்பும்
- கிறித்துவின் இரண்டாம் வருகை, உலகத் தீர்ப்பு மற்றும் இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் நம்பிக்கை.
இயேசு கிறித்து கடவூளின் மகன், கடவூளால் திருப்பொழிவூ பெற்றவர் (மெசியா) என்ற நம்பிக்கை கிறித்தவ சமயத்தின் மையக் கொள்கை ஆகும். உலக மக்கள் அனைவரையூம் பாவத்திலிருந்து மீட்கும் பொருட்டு கடவூள் தம் மகன் இயேசுவை அபிடேகம் செய்தார் என்றும், இவ்வகையில் இயேசு கிறித்து பழைய ஏற்பாட்டில் முன் கூறப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றினார் எனவூம் கிறித்தவர்கள் நம்புகின்றனர்.
மெசியா குறித்து கிறித்தவர்கள் கொண்டுள்ள புரிதல் அக்கால யூ+தர்களின் புரிதல்களிலிருந்து வேறுபட்டுள்ளது. மனிதரின் பாவங்களைப் போக்கிஇ அவர்களை இறைவனோடு ஒப்புரவாக்கி, அவர்களுக்கு மீட்பையூம் முடிவில்லா நிலைவாழ்வையூம் வழங்கவந்தவரே இயேசு; மீட்பளிக்கின்ற அந்த இயேசுவின் சாவையூம் உயிர்த்தெழுதலையூம் நம்பி ஏற்றிட மக்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பது கிறித்தவரின் நம்பிக்கை.
கிறித்தவ வரலாற்றின் துவக்க நூற்றாண்டுகளில் இயேசுவின் தன்மை குறித்து பல இறையியல் சர்ச்சைகள் எழுந்துள்ளபோதும் கிறித்தவர்கள் பொதுவாக இயேசுவை கடவூளின் அவதாரமாகவூம் “உண்மையான கடவூளும் உண்மையான மனிதரும்" ஆனவராக நம்புகின்றனர். இயேசு, முழுமையூம் மனிதராக இருந்தமையால் சாதாரண மனிதர் உணரும் வலிகளையூம் ஆசைகளையூம் உணர்ந்தார்; ஆனால் எந்த விலக்கப்பட்டச் செயலையூம் (பாவம்) செய்யவில்லை. கடவூளாக உயிர்த்தெழுந்தார். விவிலியத்தின்படி, “கடவூள் இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார்". அவர் விண்ணகத்திற்கு ஏறிச்சென்று "தந்தையின் வலது பக்கம் அமர்ந்தார். மற்ற மெசியா பணிகளை ஆற்றிட மீண்டும் திரும்பி இறந்தோரை உயிர்ப்பிப்பதுஇ கடைசி தீர்ப்பு மற்றும் இறையரசை இறுதியாக நிறுவூதல் ஆகியப் பணிகளை மேற்கொள்வார். 2வது நூற்றாண்டின் கிறித்தவ பொதுயிட வழிபாட்டைக் குறித்து ஜஸ்டின் மார்டையர் பேரரசர் அன்டோனியசு பையசுக்கு வழங்கிய முதல் மன்னிப்புக் கோரல் உரையில் கூறியூள்ளது இன்னமும் பொருந்துகின்றது.
இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிறன்று நகரத்திலுள்ள அல்லது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்று கூடி ஏசுவின் சீடர்கள் அல்லது தேவதூதர்களின் நினைவூக்குறிப்புக்களையூம் போதனைகளையூம் படிக்கக் கேட்கின்றனர்;படித்து முடித்த பிறகு கூட்டத்தலைவர் கேட்டோர் அனைவரையூம் கேட்ட நல்ல விழுமியங்களை கடைபிடிக்கக் கோருகின்றார்; பிறகு அனைவரும் எழுந்து தொழுகின்றனர்; தொழுது முடிந்த பின்னர் ரொட்டி, வைன், நீர் கொணரப்படுகின்றது; கூட்டத்தலைவர் மற்றவர்களைப் போலவே தொழுது நன்றி நவில்கிறார்; அவரது நன்றி நவில்கையை ஏற்று அனைவரும் ஆமென் எனக் கூறி ஒப்புமை வழங்குகின்றனர்; நன்றி கூறப்பட்டப் பொருட்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது; வராதவர்களுக்கும் உதவிக்குருமார்களால் அனுப்பப்படுகின்றது; செல்வம் படைத்தஇ விருப்பம் உள்ளவர்கள் தங்களுக்கு இயன்றத் தொகையை தலைவருக்கு அளிக்கின்றனர்; இதனைக் கொண்டு அனாதைகள், விதவைகள், உடல்நலிந்தோர் மற்றும் உதவித் தேவைப்படுபவர்களுக்கு வேண்டியனவற்றைச் செய்கின்றார்.
கிறிஸ்தவத்தில் அனைத்து படைப்புகளிலும் உயர்ந்த படைப்புமனிதன் என்பதும் மனிதன் தனியே இருப்பது இறைவனுக்கு விருப்பம் இல்லை என்பது தொடக்க நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இறைவன் மனிதனை குடும்ப வாழ்வூக்கும் சமூக வாழ்வூக்கும் அலைக்கின்றார் என்பதை தௌpவாக்குகின்றது. இதன்படி சமூக வாழ்வின் வெற்றிக்காக சுயநலத்தை உடைத்தெறிந்து அர்ப்பணிப்புடன் வாழ்வது முக்கியமாகும். இதற்காக இறை அன்பிலும் இறை இரக்கத்திலும் வாழ்வை கட்டியெழுப்புதல் மிக உன்னதமான விடயமாகும். அன்பை முதன்மைப்படுத்தி நீதியாக செயற்படுவதால் சமூகத்தின் பொது நலனையூம் உண்மையான அமைதியையூம், ஒழுக்க விழுமியத்தையூம் கட்டியெழுப்பலாம் என திருவிபிலியச் சிந்தனை கூறுகின்றது.
“கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்” எனும் பழைய ஏற்பாட்டின் சட்டத்திற்கு அப்பால் சென்று கிறிஸ்துவின் போதனைகளும் வாழ்க்கையின் முன்மாதிகளினதும் வழியாக முழுமையாக மாற்றி அமைத்து உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள் உங்களை துன்புறுத்துவோருக்காகவூம் இறைவனிடம் வேண்டுங்கள் (மத்தேயூ 05:43) என்ற கருத்தின் ஊடாக சகோதரத்துவ அன்பின் புதிய கண்ணோட்டத்தினை கிறிஸ்துவின் “மழை பொழிவில்” காணக்கூடியவாறு உள்ளது. ஏனைய சமயங்களை காட்டிலும் இச்சமயத்தில் கிறிஸ்மஸ் என்ற விழா மாத்திரமே அனைவராலும் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கியமான விழாவாக உள்ளது. அதாவது யேசு கிறிஸ்து பிறந்த தினத்தினை நினைவூ கூறும் வகையிலே உலகலாவிய மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
பொதுவாக இன்று ஒரு மதத்தினுடைய விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகள் என்பன இன்னொரு சமயத்தினுடைய விடயத்தில் தாக்கத்தினை செலுத்துவதை காணலாம். அதாவது இன்று இந்துஇ இஸ்லாம் சமயங்களில் கோயில் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் போது தூய்மையூடனும் பாதனிகள் இல்லாமல் தான் செல்ல வேண்டும். இம்முறையானது அவர்களின் ஒழுக்கம், நெறிமுறையாக பார்க்கப்படுகின்றது. ஆனால் இவ்வாறான முறைகள் கிறிஸ்தவ மதங்களில் காணப்படுவதில்லை. இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களில் ஒரே விதமாக நோன்பு பிடிக்கும் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மன்னிப்பு என்ற முறையானது இன்று அதிகளவூ கிறிஸ்தவ மதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது. அதாவது எவராவது தவறு அல்லது பிழையாக நடக்கின்ற போது பாவ மன்னிப்பு என்ற ஒழுங்கு முறையானது காணப்படுகின்றது. இங்கு 07 தடவை அல்லது 70 தடவை ஒருவருக்கு மன்னிப்பு வழங்கலாம் என்று இம்மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்பிக்கை என்ற விடயமானது சகல சமயங்களிலும் அவரவர் விருப்பின் பேரிலே அமைதல் வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. இறைவன் மீதான பக்தியானது சூழல் மற்றும் நிலமைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக இஸ்லாம் சமயத்தில் நேரத்திற்கு தொழ வேண்டும். ஆகவே இச்சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு வசதியான இடங்களில் தமது கடமைகளை மேற்கொள்ளலாம். விழுமியப்பண்புகளில் தானம் வழங்கல் மிகவூம் முக்கியமான விடயமாகும். அதாவது ஏழைகளுக்கு உதவூதல்இ வறியவர்களுக்கு உதவூதல் என்ற வகையில் உள்ளது. இன்று தானம் வழங்குவதில் அனைத்து மதங்களும் ஒரே விதமான போக்கையே கொண்டுள்ளமை சிறப்பான விடயமாகும்.
இன்று பெண்கள் தொடர்பாக ஒவ்வொரு மதமும் வெவ்வேறான விடயங்களை குறிப்பிட்டுள்ளது. அதாவது இஸ்லாம் சமயமானது பெண்களுக்கு அதிகளவான கட்டுப்பாடுகளையூம் விதிமுறைகளையூம் நடைமுறைப்படுத்தியூள்ளது. குறிப்பாக அவர்கள் அணியூம் உடைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். ஏனைய இந்துஇ கிறிஸ்தவ மதத்திலோ அவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லை என்றே கூறலாம். மரியாதை என்ற பண்பாட்டை பொருத்தளவில் இந்து சமயமானது அதிகளவூ கரிசனை கொண்டுள்ளது. பிள்ளைகள் எப்பொழுதும் தமது பெற்றாரை வணங்குதலை ஒரு கடமையாக கொண்டுள்ளார்கள்.
உயிர்களிடத்தில் அன்பாக இருத்தலை அனைத்து மதங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு விடயமாக காணப்படுகின்றது. அதாவது உலகிலுள்ள அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக பழகுதல் வேண்டும். எனவே இவ்வாறாக மதங்களின் விழுமிய பண்பாட்டு விடயங்கள் காணப்பட்டாலும் கூடுதலாக மதங்கள் ஒருவரை நல்வழிப்படுத்தவூம் ஒழுக்க விழுமியத்துடன் வாழ தூண்டுகோலாக அமைவதாகவே காணப்படுகின்றது.
(முற்றும்)





👌👌
ReplyDelete